ADMK Candidate Jayavardhan
ADMK Candidate Jayavardhan

ADMK Candidate Jayavardhan – சென்னை: இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் சென்னையில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிட உள்ளார். இதனால் அவரது தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

முன்னதாக, ஜெயவர்தன்-க்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். இவர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தற்போது பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வரும் ஜெயவர்தன், தரமணியில் உள்ள ராமானுஜம் ஐடி பார்க்கில் உள்ள இன்ஜினியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, ‘இளம் இந்திய குரல்’ என்ற சின்னத்தை தி ரிவர் – என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மது சரண் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் அப்போது, தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தனும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “இளைஞர்கள் அரசியலில் வர வேண்டும். ஏனெனில், நான் மருத்துவராக இருக்கிறேன், மேலும் மருத்துவமனையும் கட்டியுள்ளேன். தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன்.

ஐடி நிறுவனம் குறித்த ஆணையத்தில் நான் உறுப்பினராக இருந்துள்ளேன். இதனால் ஐடி பணிகள் குறித்து எனக்கு முழுமையாக தெரியும்.

அதனால், இளைஞர்கள் குறிப்பாக ஐடி ஊழியர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நீங்கள் நீதிகாக போராட வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தென் சென்னை, தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்துள்ளேன்.

மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஐ.டி. ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எளிதாக தொடர்புகொள்வதற்காக ஐடி பணிகளுக்கு ஒரு பிரத்யேக திட்டம் ஒன்றைச் செயல்படுத்தப் போகிறேன். இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here