அதிமுகவின் விளம்பரங்கள் திமுகவினருக்கு பெருத்த அடியாக அமைந்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ADMK Ads About DMK : திமுக தனது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் இன்று விளம்பரங்களாக வெளிவந்துள்ளது. இந்த குறிப்பிட்ட செய்திகளை விளம்பரங்களாக அதிமுக வெளியிட்டு மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. இது அதிமுகவின் வெற்றி வியூகமாக பார்க்கப்படுகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் தமிழக மக்களை தங்களுக்கு வாக்களிக்க செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த விளம்பரங்கள் தேர்தல் கால யுக்திகளாக பார்க்கப்படுகின்றன. அதிமுக, அரசின் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்களை மையமாக வைத்து “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திமுகவும் “ஸ்டாலின்தான் வர்றாரு விடியல் தரப்போறாரு” என்ற பெயரில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

திமுகவினரை திக்கு முக்காட செய்த அதிமுக விளம்பரங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அடி.!!

இந்நிலையில், திமுகவினர் மூக்கில் விரலை வைத்திடும் வகையில் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து முக்கிய நாளிதழ்களில் திமுகவின் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியினர் செய்த அராஜகங்கள் மற்றும் ஊழல்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் மற்றும் திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரங்கள் வாக்காளர்களை திமுக ஆட்சியின் அவலத்தை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த விளம்பரங்கள் அதிமுகவின் தேர்தல் வியூகமாக உள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து நாளிதழ்களை படிக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது அதிமுகவின் வெற்றி வியூமகாக பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதிமுகவின் விளம்பரங்கள் மக்களை சென்றடைந்துள்ளதோடு, மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு உதவிடும் வகையில் அமைந்துள்ளது.