
தனது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் அதிதி சங்கர்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகி அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அதிதி சங்கருக்கு அவருடைய அப்பா ஷங்கர் இரண்டு வருடங்கள் மட்டுமே நடிக்க டைம் கொடுத்து இருப்பதாகவும் விரைவில் கல்யாணம் எனவும் தகவல் பரவியது.
இப்படியான நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் அதிதி சங்கர். அதாவது என்னை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை யார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாக கூறி இது முழுக்க முழுக்க வதந்தியென உறுதி செய்துள்ளார்.
