நடிகை அதிதி ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் இளவரசி போல் எடுத்திருக்கும் அழகான போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இளவரசி லுக்கில் திரிஷாவை மிஞ்சிய அதிதி சங்கர்…!! வெளியான அசத்தல் புகைப்படம் இதோ!.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது இளவரசி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அதனைப் பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் குந்தவை த்ரிஷாவிற்கே அதிதி டஃப் கொடுக்கின்றார் எனக் கூறி அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.