நடிகை அதிதி சங்கர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளான இவர் கடந்த ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதேபோல் அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் கண்களை கவரும் அளவிற்கு போட்டோஷூட் செய்திருக்கும் அழகான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.