அதிதி சங்கரின் புதிய போட்டோ ஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.

Aditi Shankar latest photoshoot video viral:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை அதிதி சங்கர். நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அதிதி சங்கர் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட்டின் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.