நடிகை அதிதி சங்கர் தனது பள்ளி பருவத்தை நினைவூட்டும் விதமாக பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதிதி சங்கர். முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் எதார்த்தமான பேச்சு மற்றும் நடவடிக்கையால் பல ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

இயக்குனர் சங்கரின் மகளான இவர் இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பள்ளி பருவம் பற்றி மனம் திறந்து பேசி இருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், நான் பள்ளியில் படிக்கும் போது சரியான வாலு. நான் உண்மையில் ரவுடி. பல பேருடன் சண்டை போட்டு இருக்கேன் என்று கூறி தனது சுட்டித்தனத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.