மாவீரன் படம் பற்றி கிளம்பிய வதந்தியால் புல் ஸ்டாப் வைத்துள்ளார் அதிதி சங்கர்.

Aditi Shankar Clarification on Maaveeran Shooting : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

மழை காரணமாக படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருந்த நிலையில் மாவீரன் படப்பிடிப்பு கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது இதற்கு ஃபுல் ஸ்டாப் வைக்கும் விதமாக மாவீரன் பட சீட்டில் இருந்து அதிதி சங்கர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்துள்ள மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.