அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளால் எழுந்த சர்ச்சைகளுக்கு அதிதி பதிலடி கொடுத்துள்ளார்.

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி சங்கர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி அதிதி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கெல்லாம் அதிதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். வெறும் வாரிசு நடிகை என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. வாரிசு என்பதை விட திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.