
த்ருவ் விக்ரமின் முதல் படத்திற்கு எழுந்திருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கும் போதே ஐயோ அவர் பாவம், சின்ன பையன் என்று தான் தோன்றுகிறது.
Adithya Varma Expectation : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகனான த்ருவ் விக்ரம் முதல் முறையாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா.
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை முதலில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் அர்ஜுன் ரெட்டியும் துளியும் ஒன்றி போகாததால் குப்பைக்கு போனது.
அதன் பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தின் துணை இயக்குனரான கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மாவாக முதலில் இருந்து படமாக்கப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான இப்படம் மிக பெரிய வசூலை ஈட்டியது. அதன் பிறகு ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் வசூல் மழையில் நனைந்து வருகிறது.
நாணி இது உங்களுக்கு தான், வைரலாகும் ஸ்ரீ ரெட்டியின் படுக்கையறை வீடியோ.!
இதனால் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் ஆதித்யா வர்மாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் த்ருவ் விக்ரமின் பொறுப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
முதல் படத்திற்கே இப்படியொரு எதிர்பார்ப்பு எழுந்திருப்பது அவருக்கு பெருமை என்றாலும் ரிசல்ட் என்ன வருமோ? எப்படி வருமோ என்பதையெல்லாம் யோசிக்கும் போது நமக்கே பயம் வருகிறது. த்ருவ் விக்ரமுக்கு எப்படி இருக்கோ?