Adhik Ravichandran About Direct Ajith

அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குங்க என ரசிகர் கூறியதற்கு பதிலளித்துள்ளார் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

Adhik Ravichandran About Direct Ajith : தமிழ் சினிமாவில் வெளியான அடல்ட் காமெடி படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அதன் பின்னர் இவர் நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. படமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

அதன் பின்னர் இவர் தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபுதேவாவை வைத்து பஹூரா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் தல அஜித்தை கண்டித்து ஒரு கதைக் கூறுகள். தல ரசிகர் தலையை இயக்குவதை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோதே காதலைத் தேடி நித்யானந்தா, பஹீரா போன்ற கதைகளை எழுதி விட்டேன். தகுந்த காலம் அமையும்போது அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.