Adangamaru Director Next Movie

அடங்கமறு படத்தின் இயக்குனரோடு பிரபல நடிகர் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுளளது.

Adangamaru Director Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரக வலம் வருபவர் ரவி. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று அடங்க மறு. இந்த படத்தினை கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.

இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக கார்த்திக் தங்கவேல் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது எனிமி படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் விஷால் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இவர்கள் இணையும் இந்த படத்தினை பொல்லாதவன் ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.