Adanga Maru Movie Review – கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பொன்வண்ணன், சாரங்கன், முனீஸ் காந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள படம் அடங்கமறு.

கதைக்களம் :

படத்தில் போலீஸ் அதிகாரியான (SI ) ஜெயம் ரவி அம்மா,அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் என கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.

சமூதாயத்தில் செல்வாக்குள்ள 4 மனிதர்களின் மகன்கள் 4 பேர் சேர்ந்து பார்வதி என்ற இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்து விடுகின்றனர்.

ஆனால் இது தற்கொலை என போலீஸ் கேஸை முடிக்க முயற்சி செய்கிறது. ஜெயம் ரவி இந்த கேஸை எடுத்து விசாரிக்கிறார்.

இந்த நான்கு பேரும் இது போல் தொடர்ந்து பல குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிந்த ஜெயம் ரவி இவர்களை கைது செய்கிறார்.

பின்னர் செல்வாக்காலும் போலீஸ் அதிகாரிகளை கையில் வைத்து கொண்டும் இவர்களை வெளியில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

வெளியில் வந்த இவர்கள் ஜெயம் ரவியின் அண்ணனின் ஒரு குழந்தையை தவிர்த்து மற்ற அனைவரையும் கொண்டு விடுகின்றனர்.

இதனால் ஜெயம் ரவி இந்த நான்கு பேரை கொல்ல தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு போலீசுக்கு இவர்களை அவர்களின் அப்பாக்களின் கையாலேயே கொல்வேன் சபதமும் என செய்கிறார்.

அந்த நால்வரை ஜெயம் ரவி எப்படி கொன்றார்? இதனால் ஜெயம் ரவிக்கு போலீஸ் தரப்பில் இருந்து வந்த இடையூறுகளை எப்படி எதிர் கொண்டார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

ஜெயம் ரவி :

ஜெயம் ரவியின் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். இந்த நால்வரை அவர் கொள்வதற்கு போடும் திட்டங்கள் பலே பலே.

ராஷி கண்ணா :

போலீஸ் கதை என்பதால் இப்படத்தில் ராஷி கண்ணாவிற்கு பெரியதாக முக்கியத்துவம் இல்லை.. ஆனாலும் சிறப்பாக தன்னுடைய பாத்திரத்தை நடித்து கொடுத்துள்ளார்.

இதர நடிகர், நடிகைகள் :

கெட்டவர்களாக நடித்துள்ள 4 இளைஞர்கள், சம்பத் ராஜ், முனீஸ் காந்த், அழகம் பெருமாள் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அவர்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பெரிய பலம் என்றே கூறலால்.

ஒளிப்பதிவு :

சத்யன் சூரியன் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தன்னுடைய பணியை அவர் செவ்வனே செய்து கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

ரூபன் இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். வழக்கம் போல சிறப்பாக எடிட்டிங் செய்து முடித்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் :

கார்த்திக் தங்கவேல் இப்படத்தை வழக்கமான போலீஸ் கதையாக எழுதி இயக்கியுள்ளார்.

படத்தின் முதல் பாதியில் படத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம். மற்றபடி படத்தை அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜெயம் ரவியின் நடிப்பு

2. படத்தின் கதை

தம்ப்ஸ் டவுன் :

முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
அடங்கமறு திரை விமர்சனம்!
adanga-maru-movie-reviewமொத்தத்தில் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் படம் தான் அடங்கமறு.