தளபதி 64-ல் இன்னொரு பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.
விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்திருந்ததை தொடர்ந்து நடிகர் ராஜேஷும் மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக ராஜேஷ் விஜயின் சிவகாசி மற்றும் சர்கார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Veteran Actor #Rajesh joined #Thalapathy64 Cast list. After Sivakasi & Sarkar, now he is working for the third Time in #ThalapathyVijay‘s Movie. #Vijay64 #Thalapathy64 @Vijay64FilmOff! pic.twitter.com/OE7VRs43bg
— #Thalapathy64 (@Vijay64FilmOff) December 16, 2019