Actress Vidhyulekha Raman Engagement Photos
Actress Vidhyulekha Raman Engagement Photos

காமெடி நடிகை வித்யூலேகா ராமனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Actress Vidhyulekha Raman Engagement Photos : தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.

பிரபல தமிழ் நடிகர்கள் மகளான இவர் இந்த படத்தின் மூலமாக கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் குண்டாக இருந்து வந்த வித்யுலேகா சமீபத்தில் தன்னுடைய மொத்த உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக மாப்பிள்ளை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வித்யுலேகா ராமனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.