நடிகை திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதியுடன் லியோ படபிடிப்பு தளத்தில் இருக்கும் த்ரிஷாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. சவுத் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இருக்கும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து திரை துறையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருந்த திரிஷா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மே 4 ஆம் தேதியான இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் திரிஷாவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜயுடன் இருக்கும் த்ரிஷாவின் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.