திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ராங்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தனது அழகாலும் நடிப்பாலும் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரது நடிப்பில் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்த நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

திரிஷாவின் ராங்கி… திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.!

இதற்கிடையில் நடிகை திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்பட வரும் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பு உருவாகியுள்ள இப்படத்தை ஏ ஆர் முருகதாஸின் கதையில், இப்படத்தை எம் சரவணன் இயக்கியுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை திரிஷாவின் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.