நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஏராளமான திரைப்படங்களில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் சமீப காலமாக முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து வந்தார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட இவர் தற்போது பழைய படி டாப் ஹீரோக்களின் புதிய படங்களில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் KH234 திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய அப்டேட்டாக தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் D50 திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவரிடம் படகுழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது. மேலும் திரிஷா ஏற்கனவே தனுஷின் கொடி திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.