நடிகை திரிஷா பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இளமை மாறாத பேரழகியாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ள த்ரிஷா இதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதாவது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது கையில் ஜூஸை தூக்கிப்பிடித்து மொபைலில் புகைப்படம் எடுப்பது போன்ற போசில் எடுத்திருக்கும் க்யூட் போட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதனை ரசிகர்கள் லைக் செய்வது மட்டுமின்றி ஹார்ட்டின் சிம்புளுடன் கமெண்ட்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.