குக் வித் கோமாளி பிரபலத்துக்கு நடிகை தமன்னா ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் மற்றொரு கதாநாயகியாக நடிகை ராசி கண்ணா நடித்து வருகிறார். இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் ஆனால் சில பல அவர் வெளியேறியதால் ஹீரோ ரோலில் சுந்தர்.சி அவர்களே நடித்து வருகிறார்.

மேலும் இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிகை ராஷிக் கண்ணா நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தமன்னா யாருக்கு ஜோடியாக நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வெகு நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில் அது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தில், தமன்னாவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தோஷ் பிரதாப் அவர்கள் ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்னும் பிரபல சோவிலும் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.