நடிகை தமன்னா பகிர்ந்திருக்கும் ஹாட்டான போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக இடம் பிடித்திருப்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கும் தமன்னா எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பல வித புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது கிராப் டாப்பில் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் தீயாகப் பரவி ட்ரெண்டிங்காகி வருகிறது.