Actress Sunaina Marriage
Actress Sunaina Marriage

பிரபல நடிகையான சுனைனா நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இன்னொரு நடிகர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Actress Sunaina Marriage : தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக சில்லுக்கருப்பட்டி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்கள் டப்பிங் பேசிய சியான் விக்ரம், என்ன படம்? யார் அந்த ஹீரோக்கள் தெரியுமா?

இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆனால் திருமணம் பற்றி இதுவரை கிருஷ்ணாவும் சுனைனாவும் வாய் திறக்கவே இல்லை. இதனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை.

பயில்வான் அளித்த பேட்டி மட்டும் தற்போது வைரலாகி வருகிறது.