Ajith
தல அஜித் நடிக்குமாறு கேட்டும் நடிக்க முடியாமல் போனது பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகை ஒருவர்.

Actress Sudha Says About Ajith  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று சிட்டிசன்.

இந்த படத்தில் நடிக்குமாறு தல அஜித் பிரபல நடிகையான சுதாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

அதன் பின்னர் இவர் வேதாளம் படத்தில் தம்பி ராமையாவின் மனைவியாக நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் முதலாக அஜித் சுதாவை பார்த்த போது ஓடோடி வந்து அம்மா உங்களோட நடிக்கறதுல சந்தோஷம் என கூறினாராம்.

இதனை சுதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் ஒரு சிலரை பார்த்தால் தான் மரியாதை தானா வரும். அப்படியானவர்களில் ஒருவர் தான் அஜித் என கூறியுள்ளார்.

Actress Sudha