திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரிதிகா.

Actress Srithika Re-entry : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியல் மூலம் நாயகியாக ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. இந்த சீரியலுக்கு முன்பாக இவர் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நாதஸ்வரம் ஸ்ரிதிகா

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது மகராசி சீரியலில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரை மட்டுமல்லாமல் இவர் வெள்ளித்திரையில் வெண்ணிலா கபடி குழு, வேங்கை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.