சுடிதாரில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீ திவ்யா
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீதிவ்யா. இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, ஏத்தி, மருது போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீதிவ்யா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.