மாடர்ன் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் சினேகா வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சினேகா தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிடும் சினேகா தற்போது மாடர்ன் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஸ்டைலிஷாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.