Actress Shivani Narayanan BB4 Kondattam Photos

நீங்களாச்சும் சிவானி புகைப்படத்தை போட்டீங்களே என ரசிகர்கள் ரேகாவிற்கு நன்றி கூறி வருகின்றனர்.

Actress Shivani Narayanan BB4 Kondattam Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இதனையடுத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான சூட்டிங் நடைபெற்று முடிந்தது. போட்டியாளர்கள் அனைவரும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரல் ஆனது. இதனையடுத்து அன்பு டீம் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆனது.

அதேபோல் சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து எடுத்த புகைப் படமும் டிரெண்ட் ஆனது. ஆனால் இந்த புகைப்படங்கள் எதிலும் சிவானி இடம்பெறவில்லை. இதனால் சிவானி ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.

தற்போது நடிகை ரேகா ஷிவானியுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளார்.

இதனால் சிவானி ரசிகர்கள் ரேகாவிற்கு நன்றி கூறி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் சிவானி சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் லெஹங்காவில் செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.