சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார் நடிகை சீதா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சீதா. பல நடிகர்களுக்கு ஜோடியாக நாயகியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீதா.. யார் அவர் தெரியுமா? வைரலாகும் ஃபோட்டோ.!!

திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த சீதா விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனாலும் முன்பு போல் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்தார். அப்போது சீரியல் நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

43 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீதா வயதான காலத்தில் பெண்களுக்கு ஆண் துணை தேவை என்ற காரணத்தினால் திருமணம் செய்து கொண்டதாகவும் சதீஷ் தன்னுடைய வாழ்க்கையில் வந்தது மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவருடைய ஆசை நிராசை ஆனது. இரண்டாவது திருமணம் நினைத்தபடி அமையாத காரணத்தினால் ஆறு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீதா.. யார் அவர் தெரியுமா? வைரலாகும் ஃபோட்டோ.!!

தற்போது தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். நடிகர் சதீஷ் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் இலக்கியாவின் மாமாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.