Actress Sayyeshaa Dance Video
Actress Sayyeshaa Dance Video

நடிகை சாயிஷா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரம்ஜான் மாதத்தில் இப்படியா ஆடுவாங்க? நோன்பு வைக்கலயா நீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actress Sayyeshaa Dance Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாயிஷா. ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜய் எப்படி இதற்கெல்லாம் சம்மதித்தார் என தெரியவில்லை – மாஸ்டர் பற்றி பலருக்கும் தெரியாத அப்டேட்டை வெளியிட்ட நடிகை.!

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் ஷாயிஷா கணவருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்தும், டான்ஸ் ஆடியும் நேரத்தை கழித்து வருகிறார்.

சாயிஷா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் ஆடிய டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த முஸ்லிம் ரசிகர்கள் ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது? நீங்க நோன்பு வைக்கலையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை சாயிஷாவும் முஸ்லிம் என்பதால் தான் ரசிகர்கள் இவ்வாறு கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.