விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஆன்மீகச் சுற்றுலா சென்று உள்ளார் நடிகை சமந்தா.

Actress Samantha Tour With Friend : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் நான்காவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முன்பாகவே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

ஷாருக்கான் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை..விசாரணை..

விவகாரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம்.. ஆன்மீகச் சுற்றுலா சென்ற சமந்தா - அதுவும் யாருடன் சென்றுள்ளார் பாருங்க.!!

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்துக்கு இதுதான் காரணம் அது தான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. இதனால் சமந்தா தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர அவர் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருவதாக கூறியிருந்தார்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

இந்த நிலையில் அவர் தன்னுடைய தோழியுடன் இணைந்து பத்ரிநாத், கேதர்நாத் போன்ற இடங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார். ஆன்மீகத் சுற்றுலாவை முடித்து வந்த பிறகு படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமந்தா காத்துவாக்குல 2 காதல், சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் மேலும் 2 படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.