Samantha
சினிமாவை விட்டு சமந்தா விலக போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actress Samantha : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் நேற்று தெலுங்குவில் ஜானு என்ற திரைப்படம் வெளியானது.

ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான. தற்போது சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நடிப்பேன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி கொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் எனக்கு குடும்பம் இருக்கிறது, அதை கவனிக்க வேண்டும். இதனால் தான் இந்த முடிவை எடுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சமந்தா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.