நடிகை சமந்தா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்காக அண்மையில் கலந்து கொண்டிருந்த பேட்டி ஒன்றில் தனது வேதனைகளை மனம் திறந்து பகிர்ந்து இருக்கும் சமந்தாவின் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அவர் அளித்துள்ள பேட்டியில், நீங்கள் அனைவரும் என்னை சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட வலுவான ஒரு பெண்ணாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் என்னை அப்படி நினைக்கவில்லை. நானும் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்துள்ளேன். அந்த இக்கட்டான நாட்களில் இருந்து மீண்டு வர எனது குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களால்தான் நான் இப்போது இங்கு நலமாக இருக்கிறேன். ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. அப்போதைய நிலைமையை ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போது வேதனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது. என்று கூறலாம் என தெரிவித்திருக்கிறார்.