முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவிற்கு சமந்தா உதவி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் இருப்பவர் சமந்தா. இவர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சமந்தாவின் முன்னாள் மாமனாரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் சில நாட்கள் தொகுத்து வழங்க முடியவில்லை. அதனால் சமந்தா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் ரசிகர்கள் பலரும் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.