Actress Samantha About Pregnancy
Actress Samantha About Pregnancy

கர்ப்பம் ஆகி மூணு வருஷம் ஆகுது ஆனால் குழந்தை இன்னமும் வெளியே வரலை என சமந்தா கூறியுள்ளார்.

Actress Samantha About Pregnancy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மூன்று வருடத்திற்கு முன்னர் இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தற்போது வரை தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அடுத்து அவர் குடும்பத்தோடு செட்டில் ஆகி விடுவார் நடிக்க மாட்டார் என்பது ரசிகர்களின் மனப்பான்மையாக இருந்து வருகிறது.

திருமணத்திற்கு பிறகும் குறையாத மார்க்கெட்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு

மேலும் மாதத்திற்கு ஒரு முறை சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இறுதியில் அது பொய்யாகி விடுகிறது.

இந்த நிலையில் சமந்தா ரசிகர்களுடன் உரையாடியபோது இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் அடிக்கடி தான் கர்ப்பமாக இருப்பதாக கிளப்பி விடுவதை மனதில் வைத்து சமந்தா நான் கர்ப்பமாகி 3 வருடம் ஆச்சு ஆனால் குழந்தை தான் வெளியே வர மறுக்கிறது என கிண்டலாக பதில் கொடுத்துள்ளார்.

சமந்தாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.