சாக்ஷி அகர்வால் உருவத்தில் பாகிஸ்தான் நடிகை இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர் ஒரு ரீல் பகிர்ந்து இருந்தபோது பாகிஸ்தானின் பிரபல நடிகை ஆன ஆயிஷா உமரின் ரசிகர்கள் சாக்ஷியை அகர்வாலின் தோற்றத்தை பார்த்து ஒரே மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஆர்வம் கொண்டு ஆயிஷா மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் இனிமையான குரல் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர், இந்த உலகளாவிய ரசிகர்கள் உருவாக்கிய பிணைப்பை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் கூறுகையில், என் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்னபோது நானும் முதலில் நம்பவில்லை ஆனால் ஒப்பிட்டை பார்த்த பிறகு அதிர்ச்சியாகிப் போனேன் ஆயிஷா மிகவும் திறமையானவர்கள் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று பேசியுள்ளார்.
இவர்கள் இருவரும் நேரலை செய்து இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி அறிவிக்க முடிவெடுத்துள்ளனர். இந்த உரையாடலுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.