இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ளார் பிரபல தமிழ் நடிகை.

Actress Sahithya Blessed with Twins : தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சாஹித்யா.

2019ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்ற இவர் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை இயக்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பிகில் படத்தில் வர்ணையாளராக நடித்திருந்தார்.

கேரி எட்வர்டஸ்ஸை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜூன் 1-ம் தேதி ஆண், பெண் என ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.