தாறுமாறாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங்.

தமிழ் சினிமாவில் மாதவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இறுதிச்சுற்று. சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ரித்திகா சிங்.

உண்மையாகவே குத்துச்சண்டை வீரர் வீராங்கணையான இவர் இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களையும் தனது ஒர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜிம்மில் முரட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.