நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80ஸ்களில் ஃபேவரட் நடிகையாக இருந்தவர் ரேவதி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார்.
மண்வாசனை படத்தில் தொடங்கி, வைதேகி காத்திருந்தால், ஆண் பாவம், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு ,லட்சுமி வந்தாச்சு, புன்னகை மன்னன், கிராமத்து மின்னல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்தவர் என்று சொல்லலாம்.
இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேவதியா இது?ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவருக்கு 58 வயது என்பது குறிப்பிடத்தக்கது.