நடிக்க வருவதற்கு முன்பு ராஷ்மிகா மந்தண்ணா எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Actress Rashmika Old Photos : கன்னடத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.

நடிக்க வருவதற்கு முன்பு ராஸ்மிகா எப்படி இருந்தார் தெரியுமா?? முதல் முறையாக வெளியான புகைப்படம்

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட ராஷ்மிகா நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நேச்சுரல் பியூட்டி என ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.