rashmika
நடிகர் அஜித்தின் பேரை நடிகை மேடையில் கூறிய போது எழுந்த விசில் சத்தத்தை கேட்டு ஆச்சர்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Actress Rashmika Mandanna is shocked by Ajith fans – தமிழ் பட நடிகர் தல அஜித் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்களிளும் ரசிகர்களை கவர்ந்து வசூலை வாரிக்குவித்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபத்தை கொடுத்தது. இவருடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர்.

rashmika2

இந்நிலையில், தெலுங்கில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த படங்கள் தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட போது, யாருடன் நடிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அபோது, ரஜினி, அஜித் எனக் கூறினார். அஜீத்தின் பெயரை கூறியதுமே அங்கிருந்த ரசிகர்கள் விசில் அடித்து கூக்குரல் எழுப்பினர்.

கவர்ச்சிக்கு மாறிய லிப் லாக் ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படம்.!

ஆனால், ஒன்றும் புரியாத ராஷ்மிகா நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏன் கத்துகிறார்கள்? எனக்கேட்க இங்கே அப்படித்தான். அஜித் பேரை சொன்னாலே அப்படித்தான் என பதிலளித்தார். இதைக்கண்டு ராஷ்மிகா மிரண்டு போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.