
கார் விபத்தில் நடிகை ரம்பா சிக்கி உள்ளார்.
Actress Rambha Car Accident Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்பா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகை ரம்பா குழந்தைகளை ஸ்கூலிலிருந்து காரில் அழைத்து வரும்போது மற்றும் கார் மீது மோது விபத்தில் சிக்கியதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவரும் மூத்த மகளும் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் இளைய மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிய வந்துள்ளது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.