புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. ஆனால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வு தேவை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானாவர் ரைசா வில்சன்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழில் பியார் பிரேமா காதல், எஃப் .ஐ .ஆர், காபி வித் காதல் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.