அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளார் பூஜா ஹெக்டே.
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
இது மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது அடர்ந்த வனப் பகுதிக்குள் ஒரு ட்ரிப் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.