பார்வதி நாயர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி நாயர்.
இதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால் ,உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி நாயர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி அதில் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவால் ரசிகர்கள் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.