கடந்த சில தினங்களாக மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருவது சின்னத்திரை நடிகை நிலானி மற்றும் தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் காந்தி லலித் குமார் தான். நிலானி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார் காந்தி.

மேலும் நிலானி மற்றும் காந்தி லலித் குமார் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோக்கள், அலைபேசி தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இதனால் நெட்டிசன்கள் நிலானியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் நிலானி இன்று தன்னுடைய வீட்டில் கொசு மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் KK நகர் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

மேலும் நிலானி தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தால் சின்னத்திரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here