ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படத்தில் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ருத்ரன் திரைப்படம் நிறைவடை நிலை தொடர்ந்து விரைவில் சந்திரமுகி 2 திரைப்படம் நிறைவடைய இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புது காம்போ குறித்த அப்டேட்டா உற்சாகமடைந்த ரசிகர்கள் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.