Actress Nakma Upcoming Movie : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. இவர் பெரும்பாலான படங்களில் தனது தொடை தெரியும் அளவிற்கு தான் டிரஸ் போடுவது, இவரது வழக்கமாக இருந்ததால், இவரை ரசிகர்கள் அனைவரும் தொடையழகி என்று செல்லமாக அழைப்பார்கள்.

ஹிந்தி தெலுங்கு என பரபரப்பாக நடித்து வந்த நக்மா ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரது கிளாமரான நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை. அவரின் அசத்தல் நடிப்பு, அடுத்த படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடி ஆகியது.

சீக்கிரம் உன்னோட ஆட்டம் அடங்க போது – மீரா மிதுனுக்கு சனம் செட்டி எச்சரிக்கை!!!

உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டால் அடுத்து வாய்ப்புகள் வருவது எதார்த்தம் தானே. அதன்படியே, மேட்டுக்குடி, பிஸ்தா, லவ் பேட்ஸ் போன்ற படங்களில் இவர் பெரிதும் பிரபலமானார். சிட்டிசன். படத்தில் இவரது துணிச்சலான சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடி மறு முகத்தை காட்டினார். பிறகு தமிழில் அவர் நடிக்கவே இல்லை.

மராத்தி, பேஜ்பூரி படங்களில் பிஸியாக இருந்தவருக்கு அரசியல் ஆர்வம் வர, காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அரசியலுக்கு தனது முழு நேரத்தையும் செலவிட்டு நடிப்பையே நிறுத்திவிட்டார்.

இப்போது அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்து விட்டதாம். எனவே தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் நக்மா. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் நக்மாவை காண்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.