padayappa
ரஜினி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் பற்றி பல வருடங்களுக்கு பின் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Actress nagma acted in padayappa movie – கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சிவாஜி, லட்சுமி, செந்தில், ரமேஷ் கண்ணா, மணிவண்ணன் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே நடித்து கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ‘படையப்பா’. இப்படம் ரஜினிக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு அசத்தலான வில்லி வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு சினிமா துறையில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

பிக்பாஸில் வெற்றி பெறாதது வருத்தமா? – தர்ஷன் வெளியிட்ட உருக்கமான வீடியோ

இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் இப்படம் பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். ஆனால், அவருக்கு முன் அந்த வேடத்தில் நடிகை நக்மா நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் திடீரென படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். எனவே, அவசர அவசரமாக சௌந்தர்யாவை ஒப்பந்தம் செய்து படையப்பா உருவானதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பில் நக்மா, ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்  புகைப்படமும் வெளியாகியுள்ளது.

nagma

நக்மா அரசியலுக்கு சென்றுவிட்டார். ஹெலிகாப்டர் விபத்தில் சௌந்தர்யா மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.