டிவி சீரியல்களில் கலந்து கொள்ளாததற்கு காரணத்தை கூறியுள்ளார் மைனா நந்தினி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மைனா நந்தினி இருப்பார். ஆனால் சில மாதங்கள் அவரை எந்த நிகழ்ச்சியிலும் காண முடிவதில்லை. இது குறித்த பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன.
ஆனால் ஒரு பேட்டி ஒன்றில் மைனா நந்தினி இடம் நீங்கள் ஏன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை? உங்களை கூப்பிடவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது மட்டும் இல்லாமல் கருத்து வேறுபாடா? என்றும் கேட்டு வந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக மைனா நந்தினி எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. அவர்கள் கூப்பிட்டாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் செல்ல முடியவில்லை. அது மட்டுமே உண்மை.
என்னுடைய கனவை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன். பட வாய்ப்பு மற்றும் வெப் சீரிஸ் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் என்னைப் பற்றி வரும் வதந்திகள் அனைத்தும் பொய் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யோகி பாபு நடித்து வெளியான சட்னி சாம்பார் படத்தில் மைனா நந்தினி முக்கிய கதாபாத்திரம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.