பிக்பாஸ் மும்தாஜ் வீட்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Mumtaj Home Maid Complaint : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் வெளியில் வராத மும்தாஜ் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். சென்னையில் அவரது வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு வேலை செய்யும் பிடிக்காத அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த சிறுமி ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த இரண்டு சிறுமிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்தாஜ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.